
சியாங் ராய், பிப் 15- காதலர் தினத்தை முன்னிட்டு புவி-தகவல் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம், அதிசயத்தக்க புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
தாய்லாந்து Chiang Rai -யில் இதயம் வடிவில் இருக்கும் காட்டின் புகைப் படத்தை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.
பூமியிலிருந்து 694 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து துணைக்கோளத்தின் வாயிலாக அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த இதயம் வடிவிலான காடு, உட்புற கிரமாத்து மக்களுக்கு தூய்மையான காற்றினை வழங்கும் ‘பசுமை இதயமாகவும்’ செயல்பட்டு வருகிறது. அந்த காட்டுப் பகுதியை வயல் வெளிகளும் மரவெள்ளிக்கிழங்கு தோட்டங்களும் சூழ்ந்திருக்கின்றன.