Latestமலேசியா

சிரம்பானில், பத்து வயது சிறுவன் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், தாய்க்கு RM700 அபராதம்

சிரம்பான், செப்டம்பர் 9 – கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி சிரம்பானில், பத்து வயது சிறுவன் செலுத்திய வாகனம் விபத்துக்குள்ளனதில், அவனது தாயார் கைது செய்யப்பாட்டார்.

மகனை வாகனம் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக, துப்புரவுத் தொழிலாளியான அந்த தாயாருக்குப் போக்குவரத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 700 ரிங்கிட் அபராதம் அல்லது அபராதத்தை செலுத்த தவறினால் 7 நாட்கள் சிறை தண்டனை என உத்தரவிட்டது.

குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட போது, அந்த 46 வயதான தாயார் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டின் படி, பெற்றோருக்கு சொந்தமான Toyota Corolla வாகனத்தில், அண்டை வீட்டைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனை அழைத்துக்கொண்டு அந்த பத்து வயது சிறுவன், தாமன் அரோவானா இம்பியன்னில் (Taman Arowana) சாலை சந்திப்பில், வேன் ஒன்றை மோதியிருக்கிறான்.

இதில் சிறுவன் செலுத்திய வாகனத்தால் மோதப்பட்ட வேன், நகர்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த Perodua Kancil காரில் மோதியுள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு சிறுவர்களும் காயம் அடையவில்லை.

சம்பந்தப்பட்ட சிறுவனின் ஆபத்து மிக்க இந்த செயலினால் அவனது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!