Latestமலேசியா

சிரம்பானில் 10 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்து: ஒருவர் பலி; மூவர் காயம்

சிரம்பான், செப்டம்பர் 18 – இன்று பிற்பகல் வாக்கில், சிரம்பானில் கற்களை ஏற்றிச் சென்ற இரண்டு லோரிகள் உட்பட 10 வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இதில் தலையில் மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் 40 வயதான ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்; அதேவேளையில் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், லோரிக்கு அடியில் சிக்கி இருந்த இறந்த ஆடவரை, கிரேன் உதவியுடன் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயணைப்பு மீட்டு துறையினர் மீட்டுள்ளனர்.

இதனிடையே, லோரி ஓட்டுநர்கள் சீராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர்.

Proton Saga, Perodua Axia, Perodua Myvi, Proton Persona, Nissan X- Trail, Perodua Kancil, Honda City, Mitsubishi Triton உள்ளிட்ட வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!