
சிரம்பான், ஜன 25 – நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் , குவாலா பிளா பகுதிகளில் உள்ள சில இடங்களில், ஜனவரி 31-ஆம் தேதியிலிருந்து 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடை ஏற்படும்.
நீர் குழாய்களைப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், குறிப்பிட்ட அப்பகுதிகளில் தற்காலிகமாக நீர் விநியோகத் தடை ஏற்படுமென SAINS எனப்படும் நெகிரி செம்பிலான் நீர் நிறுவனம் தெரிவித்தது.
இவ்வேளையில், நீர் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு திரும்பாமல் தாமதமாகினால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் , தண்ணீர் லாரிகளின் மூலமாக நீர் விநியோகிக்கப்படும் அல்லது தண்ணீர் தொட்டிகள் நிறுத்தி வைக்கப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டது.
நீர் விநியோக பாதிப்பு குறித்த இடங்கள் அல்லது மேற்விபரங்களுக்கு பொது மக்கள் SAINS நிறுவனத்தை ( 1-800-88-6982) தொடர்பு கொள்ளலாம் .