Latestமலேசியா

சிரம்பான் மருத்துவமனை மருந்தகம் தீப் பிடித்தது

சிரம்பான், மார்ச் 17 -நேற்று மாலை, சிரம்பான் Tuanku Jaafar மருத்துவமனையின், மருந்தகப் பிரிவில் தீ ஏற்பட்டதை அடுத்து, அம்மருத்துவமனை ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை என நெகிரி செம்பிலான் சுகாதார இயக்குநர் Datin Dr. Harlina Abdul Rashid தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் , சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்பாகவே, தீயை கட்டுக்குள் கொண்டு வர மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரிகளும் பணியாளர்களும் துரிதமாக செயல்பட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!