
லாஸ் ஏஞ்சல்ஸ் ,மார்ச் 13 – டான் ஶ்ரீ மிச்சேல் யோ , சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்திருப்பதோடு, உலக பிரசித்திப் பெற்ற திரையுலக விருதினை வென்று நாட்டிற்கு பெருமையையும் சேர்த்திருக்கின்றார்.
Everything Everywhere All At Once எனும் ஹாலிவூட் திரைப்படத்தில் ஏற்று நடித்த முக்கிய கதாபாத்திரத்துக்காக , அவர் அந்த விருதினை தட்டிச் சென்றார்.
95 ஆண்டுகால ஆஸ்கர் வரலாற்றில், சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆசியாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் அந்த விருதினைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
அத்துடன் அந்த விருதினை வென்ற முதல் மலேசியர் என்ற பெருமையையும் 60 வயதான மிச்சேல் யோ பெற்றுள்ளார்.