
குற்றச்செயல்கள் குறித்து இனி பொதுமக்கள், 0193764763 என்ற ‘ஹாட்லைன்’ எண் வாயிலாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையிடம் நேரடியாக புகார் செய்யலாம்.
குற்றச்செயல்களை தடுப்பதற்காக அந்த ஹாட்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
அந்த ஹாட்லைனை, குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளே முழுமையாக நிர்வகிப்பார்கள்.
அதனால், புகார்கள் உட்பட சூதாட்டம், விபச்சாரம், குண்டர் கும்பல், ஆட்கடத்தல், மோசடி கும்பல் என அனைத்து குற்றச்செயல்கள் குறித்தும் பொதுமக்கள் நேரடியாக குற்றப்புலனாய்வுத் துறையிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.