கோலாலம்பூர், மார்ச் 5 – PICKids எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசி போடும் திட்டத்தில் பங்கேற்பதற்கு MySejahtera வின் மூலம் முன்கூட்டியே திவு செய்யும் நடைமுறை நாடு முழுமைக்கும் மார்ச் 7ஆம் தேதி தொடங்குகிறது.
இதன்வழி பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நாளை முன்கூட்டியே நிர்ணயித்துக்கொள்வதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என ProtectHealth வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 3 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் தொடங்கப்பட்ட PICKids திட்டம் தற்போது நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. Omicron தொற்றின் பாதிப்பிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கும் அவர்களது சுகாதாரம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் நீடித்த முயற்சியாக பிள்ளைகளுக்கான தேசிய தடுப்பூசி திட்டம் அமைகிறது.