கோலாலம்பூர், பிப் 21 – சிறார்களுக்கான PICKids கோவிட் தடுப்பூசி திட்டம் தொடங்கியதிலிருந்து, தடுப்பூசிக்கு பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியிருப்பதாக , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
இதனிடையே, நாட்டில் கோவிட் தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால், தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெற்றோர், ‘காத்திருந்து பின்னர் முடிவு செய்யும் தாமதப் போக்கினை கைவிடும்படி கைரி கேட்டுக் கொண்டார்.