கோலாலம்பூர், பிப் 7 – உடல் உறுப்பு விற்பனைக்காக 15 வயதுக்கு கீழ்பட்ட சிறார்களைக் கடத்தும் கும்பலொன்றுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸ் மக்களை கேட்டுக் கொள்ளவில்லை.
அந்த கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் ஏற்கனவே 2016 –ஆம் ஆண்டில் வைரலாகியிருந்ததகவும், அது மீண்டும் தற்போது பகிரப்பட்டிருப்பதாகவும் அரச மலேசிய போலீஸ் படையின் வர்த்தக தொடர்பு பிரிவைச் சேர்ந்த superintendent A. Skandaguru தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருக்கும் தகவலில் , கும்பலொன்று புரோட்டோன் வீரா காரையும், வேனையும் பயன்படுத்தி சிறார்களைக் கடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, பொது மக்கள் தேவையின்றி பீதியை ஏற்படுத்தக் கூடிய உறுதிச் செய்யப்படாத அத்தகைய தகவலை பகிர வேண்டாமென , ஸ்கந்தகுரு கேட்டுக் கொண்டார்.