Latestமலேசியா

சிறார்கள் – பதின்ம வயதினருக்கான தடுப்பூசி பதிவு தொடங்கியது

கோலாலம்பூர், ஜூலை 22 – 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு தொடங்கியது. MySejahtera செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தேசிய தடுப்பூசிக்கான நடவடிக்கை இயக்கம் இதனை உறுதிப்படுத்தியது. தொடக்க கட்டமாக 2003 ஆம் ஆண்டு பிறந்த மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் கல்வியை தொடரவிருக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

அதோடு நோய் அபாயம் உள்ள சிறார்கள் மற்றும் பதின்ம வயதினர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என தேசிய தடுப்பூசி நடவடிக்கை இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான பதிவு whatsup புலனத்திலும் மேற்கொள்ளலாம் என இதற்கு முன் தகவல் வெளியானது. பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் தங்களது கண்காணிப்பில் இருக்கும் பிள்ளைகளை எளிதாக பதிவு செய்யும் நோக்கத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!