
கோலாலம்பூர், நவ 6 – சிறார்கள் மற்றும் இளையோர் மீதான பாலியல் குற்றங்களை அலட்சியப்படுத்தும் போக்கு குறித்து போலீஸ் படைத் தலைவரான ஐ.ஜி.பி டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் கவலை தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றச்செயல்களை வழக்கமான ஒன்று என பொதுமக்கள் கருதுகின்றனர். உண்மையில் சிறார்கள் மற்றும் இளையோருக்கு எதிரான பாலியல் குற்றங்களை கடுமையான குற்றங்களாக கருத வேண்டும்.
சிறார்களையும் இளையோரையும் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் கடப்பாட்டையும் பொறுப்புணர்வையும் பொதுமக்கள் கொண்டிருக்க வேண்டும் என ரசாருடின் கேட்டுக்கொண்டார்.