Latestமலேசியா

சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்த வெளிநாட்டு மாணவன் சிரம்பானில் கைது

நெகிரி செம்பிலான், செப் 22 – சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்த சந்தேகத்தில் நெகிரி செம்பிலான், சிரம்பானில் 24 வயது வெளிநாட்டு ஆடவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். சோதனையின் போது, அந்த மாணவனின் மடிக்கணினியிலும் கைபேசியிலும் ஏராளமான சிறார் ஆபாசப் படங்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

உள்நாட்டு உயர்க்ல்வி கூடத்தில் பயிலும் அந்த மாணவனை மலேசிய போலீசாரும் FBI அமெரிக்க மத்திய புலனாய்வு துறையினரும் சேர்ந்து கைது செய்ததாக , தேசியப் போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா மொஹமட் சாடூடின் (Datuk Noorsiah Mohd Saaduddin) தெரிவித்தார்.

அந்த மாணவன், சமூக வலைத்தளங்களின் மூலமாக, சிறார்களை தனது வலையில் சிக்க வைத்து, பின்னர் அவர்களை மிரட்டி ஆபாச காணொளிகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறார்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!