Latest
சிறார் ஆற்றில் விழுந்ததால் கிந்தா பூங்காவில் விளையாட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன
ஈப்போ, மே 10 – ஈப்போ, Kinta Riverwalk பொழுதுபோக்கு பூங்காவில் சிறார்களுக்கான வாகன விளையாட்டு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த பூங்காவில் வாகன விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறார் ஒருவர், அங்கிருந்த ஆற்றுக்குள் விழுந்ததை அடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஈப்போ நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
இதனிடையே சம்பவத்தன்று ஆற்றில் விழுந்த அந்த சிறாரை, பொது மக்கள் விரைந்து காப்பாற்றிய வேளை, அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருக்கிறது.