Latestமலேசியா

சிறார் தொடர்பான கற்பழிப்பு குற்றச்செயல்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர், மே 6 – வயது குறைந்தவர்கள் சம்பந்தப்பட்ட கற்பழிப்பு குற்றச்செயல்கள் அண்மைய சில ஆண்டுகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களே காரணம் என புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் Shuhaily Zain தெரிவித்தார். கடந்த ஆண்டு கிளந்தானில் 9வயது சிறுமியை அதே வயதுடைய மற்ற சிறுவர்கள் கும்பலாக கற்பழித்த சம்பவம் நடந்த போதிலும் அவர்கள் 10 வயதுக்கும் குறைவாக இருப்பதால் குற்றஞ்சாட்டு கொண்டு வர முடியவில்லை என்ற உதாரணத்தையும் அவர் வெளியிட்டார்.

அவர்கள் அனைவரும் 9 வயதுடையவர்கள். ஒரே வயதாக இருப்பதால் அது இணக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது குறைந்த வயதுடைய சிறுமி என்பதால் சட்ட ரீதியில் குற்றமாகும் என Shuhaily Zain செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரு மாணவனின் அளிப்பான் எனப்படும் Eraserரை இரண்டு துண்டாக அந்த சிறுமி ஆக்கியதால் புதிய Eraser ரை வாங்க முடியாத காரணத்தினால் அந்த சிறுமி அவர்களுடன் பாலியல் உறவுக்கு இணக்கம் தெரிவித்திருக்கக்கூடும் என அவர் கூறினார். புதிய Eraser ரை வாங்குவதற்கு அச்சிறுமியிடம் பணம் இல்லையென்பதால் அதற்கு பதிலாக பாலியல் உறவுக்கு அச்சிறுமி இணக்கம் தெரிவித்திருக்கலாம். இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரமுடியாது. 10 வயதுக்கும் குறைந்த சிறார்களை குற்றஞ்சாட்ட முடியாததே இதற்கான காரணம். எனினும் சமூக வலைத்தளத்தின் போக்கினால் நாங்கள் விசாரணையை தொடங்கினோம், இதுபோன்ற சம்பவம் சிறுதுளிதான். குறைந்த வருமானம் பெறுவோர் குடும்பங்களில் இந்தகைய குற்றச்செயல்கள் அதிகமாக நடந்திருக்கலாம். ஆனால் இவை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என Shuhaily கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!