
ஈப்போ, ஏப் 26 – தம்புனில் உள்ள வீடு ஒன்றில் சிறார்களுக்கான நீச்சல் குளத்தில் 21 மாத குழந்தை ஒன்று மூழ்கி இறந்தது. ஒரு வயது 9 மாதங்கள் நிறைந்த அந்த பெண் குழந்தை அவ்வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் இரவு மணி 8.45 அளவில் மிதந்து கிடந்ததை அக்குழந்தையின் பெற்றோர் கண்டதாக ஈப்போ ஓ.சி.பி.டி துணை கமிஷனர் Yahaya Hassan தெரிவித்தார். அந்த குழந்தையின் தாத்தாவின் வீட்டில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். இச்சம்பவம் நடப்பதற்கு முன்னதாக அந்த குழந்தையும் அவரது பெற்றோரும் அந்த வீட்டிற்கு வருகை புரிந்ததாக Yahaya Hassan கூறினார்.