Latestமலேசியா

சிறார், பெண்களை உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன ; போலீஸ்

கோலாலம்பூர், மார்ச் 17 – நாட்டில் குற்றச் செயல்கள் குறிப்பாக சிறார்களையும் பெண்களையும் உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

2020 -இல் 11,092-ஆக இருந்த அந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 12, 890 -ஆக அதிகரித்ததாக புக்கிட் அமான் குற்றச் செயல் புலனாய்வு பிரிவின் இயக்குநர் Abdul jalil Hassan தெரிவித்தார்.

பாலியல் வன்முறை, சிறார் சித்ரவதை, குழந்தைகள் வீசப்படுவது, குடும்ப வன்முறை ஆகியவை ,அதிகரித்திருக்கும் அந்த குற்றச் செயல்களில் அடங்குமென அவர் கூறினார்.

அந்த சம்பவங்களில் , அதிகமாக 6, 540 குடும்ப வன்முறை புகார்கள் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!