
தம்பின், மார்ச் 21 – தம்பின், kampung Sri Repah-வில் உள்ள மக்களின் கால்நடைகளை கடந்த ஒரு வார காலமாக அடித்துக் கொன்று வேட்டையாடி வந்த சிறுத்தை ஒன்று பிடிபட்டதைத் தொடர்நது அந்த கிராமவாசிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருந்து வந்த அந்த சிறுத்தை குறித்து மக்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அதனை பிடிக்கும் தீவிர நடவடிக்கையில் வனவிலங்கு துறையினர் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வனவிலங்குத்துறை வைத்த பொறியில் அந்த சிறுத்தை சிக்கியது. நேற்று முன் தினம் கூட தான் வளர்த்து வந்த செம்மறி ஆடு ஒன்றை தாக்கிக் கொன்ற அந்த சிறுத்தை இறுதியில் பிடிபட்டது குறித்து நிம்மதி அடைந்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளரான 57 வயதுடைய இட்ரிஸ் இசா தெரிவித்தார்.