
பாக்கிஸ்தான், இஸ்லாமபாட்டில், கூண்டிலிருந்து தப்பிய சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் வேளை ; நால்வர் படுகாயமடைந்தனர்.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு நகர சாலைகளில் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்திய அந்த சிறுத்தை, இறுதியில் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது.
செல்வந்தர் ஒருவரின் வளர்ப்பு பிராணியான அந்த சிறுத்தை கூண்டிலிருந்து தப்பி நகரில் நுழைந்ததாக கூறப்படுகிறது.