Latestஉலகம்

சிறுமிகள்  குறைந்த வயதில் பருவமடைவது அதிகரித்திருக்கிறது

ஹைதரபாத், அக்  22 – 13 வயதிலிருந்து 15 வரையிலான பெண்கள் வழக்கமாக பருவமடையும் வயது, தற்போது  7-ஆக  குறைந்திருப்பது  மருத்துவர்களை கலக்கமடைய வைத்திருக்கின்றது.

பெண்கள்  குறைந்த வயதிலே பருவமடைவதற்கு  தகுந்த காரணங்கள் இதுவரை  குறிப்பிடப்படவில்லை என்றாலும்,  பூச்சிக் கொல்லிகளில் காணப்படும்  ரசாயனம்,  நெகிழி பொருட்கள், சுய அழகு பராமரிப்பு சாதனங்களில் காணப்படும் ரசாயனம் ஆகியவை அதற்கு முக்கிய காரணமாக அமைவதாக ,இந்தியாவின்,   Magna  மருத்துவ மையத்தைச் சேரந்த மகப்பேறு- குழந்தைகள்  நல மருத்துவர்  சிவரஞ்சினி   சந்தோஷ் கூறியுள்ளார்.

சமந்தப்பட்ட பொருட்களில் உள்ள ரசாயனம் சிறுமிகளின்   உடலுக்குள்  உணவு,  நீர் , காற்று, தோல் வழியாக  நுழையும்போதும் அவர்களின் உடலில் ஹார்மோன் மாறுபாடுகள் ஏற்படுவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!