
ஷா அலாம், நவ 10 – தம்மிடம் தெக்குவாண்டோ பயிற்சி பெற வந்த ஐந்து சிறுமிகளை மானப்பங்கப்படுத்தியதன் தொடர்பில் தெக்குவாண்டோ பயிற்சியாளரான Ahmad Munir Zainuddin என்பவர் மீது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Rasyihah Ghazali முன்னிலையில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.. கடந்த செப்டம்பர் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்குமிடையே 20 வயதுடைய Ahmad Munir இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.
ஏழு முதல் 11 வயதுடைய சிறுமிகளை ஷா அலாம் செக்சன் 28 இல் உள்ள பொதுமண்டபத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. மானபங்கபடுத்தியதாக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறை , பிரம்படி ஆகியவரை விதிக்கப்படும் 2017ம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 14ஆவது விதியின் உட்பிரிவு ( a) வின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் டிசம்பர் 14ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.