Latestமலேசியா

சிறுமி அல்பர்டைன் லியோ கடத்தல் சம்பவம்; புதிய ஆதாரங்கள் சிக்கியதால் சந்தேக நபர் மீண்டும் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-4, 6 வயது சிறுமி அல்பர்டைன் லியோ ஜியா ஹூய் (Albertine Leo Jia Hui) ஜோகூர் பாரு eco galleria பகுதியில் ஜூலை 20-ஆம் தேதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி விடுதலையான உள்ளூர் ஆடவர், மீண்டும் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கூலாயில் உள்ள அச்சந்தேக நபரின் வீட்டில் பல்வேறு செக்ஸ் பொம்மைகள், ஆபாசப் படங்கள், சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீண்டும் கைதானார்.

ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம். குமார் அதனை உறுதிபடுத்தினார்.

இதையடுத்து, சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக, 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் அந்நபர் விசாரிக்கப்படுகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறையும் பத்தாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதோடு, ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 292-வது பிரிவின் கீழ், மூன்றாண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம் என கமிஷ்னர் குமார் சொன்னார்.

ஜோகூரில் காணாமல் போன 3 நாட்களுக்குப் பிறகு சிலாங்கூர் பாத்தாங் காலியில் அச்சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டாள்.

முதலில் காணாமல் போன சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு, பின்னர் கடத்தலாக அது வகைப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!