Latestமலேசியா

சிறுவன் சைய்ன் ராயன் விசாரணை முடிந்துவிட்டது – சுஹாய்லி

கோலாலம்பூர், ஜூன் 13 – ஆட்டிசம் பாதிப்புக்குள்ளனான ஆறு வயது சிறுவன்  சைய்ன்   ராயன்   கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை  முழுமையடைந்துவிட்டது. எனினும் குற்றச்சாட்டு  பிரிவு கேட்டுக்கொண்டால்   மேல் விசாணையை தொடர முடியும் என  புக்கிட் அமான்  குற்றவியல்  விசாரணைத்துறையின்  இயக்குனர்    டத்தோஸ்ரீ   Shuhaily  Mohd  Zain   தெரிவித்தார்.

இப்போதைக்கு விசாரணையை போலீஸ் தரப்பு முடித்துக் கொண்டு விட்டது.  அனைத்தும் சட்டத்துறை அலுவலகத்தின் குற்றச்சாட்டு பிரிவின் கையில் இருக்கிறது என இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில்    அவர் கூறினார்.  

இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் ஆருடங்கள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என  அவர் கேட்டுக்கொண்டார்.  கொலைசெய்யப்பட்ட சைய்ன் ராயனுக்கு  நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால்  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்கு  அனைவரும் அனுமதிக்க வேண்டும்.      

பாதிக்கப்பட்டது  ஆட்டிசம் குறைப்பாட்டைச்  கொண்ட சிறுவன். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அச்சிறுவனின் தாயும் தந்தையுமாக இருப்பதால் இது ஒரு உணர்ச்சிகரமாக  வழக்காகும் என   சுஹாய்லி    சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!