
ஈப்போ, ஏப் 24 – பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாளன்று சிறுவன் தனேஷ் நாயர் அருகேயுள்ளள நீச்சல் குளத்தில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் சிறார் சட்டத்தின் அலட்சியம் அல்லது கவனக் குறைவு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Yahaya Hassan தெரிவித்துள்ளார். பாலர் பள்ளியில் சேர்த்த தனது மகன் தனேஷ் நாயர் Autism அல்லது மன இறுக்கத்திற்கு உள்ளான சிறுவன் என்று அவனது தாயார் நீல வேணி பாலர் பள்ளி தலைமையாசிரியை மற்றும் அதன் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லையென்பதோடு இது தொடர்பாக அவர் எந்தவொரு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நீரில் மூழ்கியதால் உடலின் உள் உறுப்புக்கள் குறிப்பாக மூளையும் இதர உடல் உறுப்புக்கள் செயல் இழந்ததால் தனேஷ் நாயர் இறந்தான் என அவனது உடலில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையின் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக Yahaya Hassan தெரிவித்தார்.
அந்த சிறுவனின் உண்மை நிலை குறித்து தெரிவிக்கப்படாத போதிலும் இரண்டு மணி நேரம் பரிட்சார்த்த அடிப்படையில் அச்சிறுவனை சேர்த்துக்கொள்வதற்கு அவர் அனுமதித்ததோடு சம்பவம் நிகழ்ந்த மறுநாளன்று ஏப்ரல் 18 ஆம் தேதியன்று Kinder Labz தலைமையாசிரியர் சிமோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் Yahaya Hassan தெரிவித்தார்.