ஈப்போ, ஜன 7 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதம் தங்களது பராமரிப்பில் இருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணம் அடையும் வகையில் கவனக் குறைவாக இருந்ததாக மழலையர் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. 60 வயதுடைய எஸ்.பி. எஸ்தர் கிறிஸ்டினா, மற்றும் 29 வயதுடைய எம். மனிசா, ஆகியோருக்கு எதிராக நீதிபதி அஸிசா அஹ்மத் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவ்விருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம்தேதி காலை மணி 10.07 அளவில் Chemor, Bandar Baru Klebang கில் உள்ள மழலையர் பள்ளியில் தனேஸ் நாயர் என்ற
4 வயது சிறுவனை கவனிப்பது மற்றம் மேற்பார்வையிடுவதை உறுதிப்படுத்துவதில் அலட்சியமாக இருந்ததாக மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
2001ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 33 ஆவது பிரிவு (1)(a) இன் கீழ் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 34ஆவது பிரிவின் கீழ் எஸ்தர் கிறிஸ்டினா, மனிசா ஆகியோருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம் , ஐந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டுமே விதிக்கப்படலாம். அந்த இருவருக்கும் 3,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு வழக்கு முடிவடையும்வரை அரசு தரப்பு சாட்சிகளுக்கு ◌தொல்லை தரக்கூடாது என உத்தரவிடப்பட்டது.