புத்ரா ஜெயா, மே 3 – 1991 ஆம் ஆண்டு சிறுவயதாக இருந்தபோது தாம் இஸ்லாமிய சமயத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய ஒரு பெண்ணின் 10 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. அந்த பெண்ணின் மத மாற்றத்தை மாற்றுவதற்கான மேல் முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூவர் கொண்ட கூட்டரசு நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் 2-1 என்ற நிலையில் வழங்கிய தீர்ப்பில் 36 வயதான அந்த பெண் தனது முஸ்லீம் மதமாற்ற தாயால் கொண்டு வரப்பட்ட மத மாற்றத்தை ரத்து செய்த 2021 ஷா ஆலம் உயர் நீதிமன்ற தீர்ப்பை நிலைநிறுத்துவதற்கான மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில், மேல் முறையீட்டு நீதிமன்றம் , சிலாங்கூர் இஸ்லாமிய மன்றம் ( MAIS ) மற்றும் மாநில அரசாங்கத்தின் மேல்முறையீட்டை அனுமதித்தது. 1991 ஆம் ஆண்டில், அவரது தாயார் – அதற்குள் அவரது இந்து தந்தையிடமிருந்து பிரிந்து – இஸ்லாத்திற்கு மாறினார் மற்றும் அப்போது ஐந்து வயதாக இருந்த தனது மகளை இஸ்லாத்திற்கு மாற்ற MAIS சிடம் உதவி கேட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு மதமாற்றச் சான்றிதழை Jais எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமியத்துறை வழங்கியது. இருப்பினும், அவரது தாயார் – அந்த நேரத்தில் ஒரு முஸ்லீம் ஆடவரை மணந்ததால் தனது பெண் தொடர்ந்து இந்து மதத்தை கடைப்பிடிக்க அனுமதித்தார் . டிசம்பர் 2013 மற்றும் ஜூலை 2017 க்கு இடையில், மதமாற்றத்தை ரத்து செய்வதற்கான அவரது விண்ணப்பத்தை ஷரியா நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தை ஷா ஆலம் சிவில் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் Amar Abang Iskandar Abang Hashim மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Abu Bakar Jais ஆகியோர் பெரும்பான்மையான முடிவில் அந்த பெண்ணின் வழக்கு மனுவை இன்று தள்ளுபடி செய்தனர். எனினும் இந்த முடிவுக்கு எதிராக நீதிபதி Mary Lim Thiam மாற்றுக் கருத்தை வெளியிட்டார்.