Latestமலேசியா

சிறைக்குள் போதைப் பொருள் கடத்திய வார்டனுக்கு மரண தண்டனை

ஷா ஆலாம், பிப் 1 – 4 ஆண்டுகளுக்கு முன்பு, சிறைக்குள் போதைப் பொருளை விநியோகித்ததற்காக, சிறை வார்டனுக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது.

40 வயதான Mohd Elmy Arif Hamid எனும் அந்த ஆடவர், 410.07 கிராம் கஞ்சாவையும், Metham-phetamine போதைப் பொருளையும் சிறைக்குள் விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அந்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து Mohd Elmy- க்கு மரண தண்டனை விதித்து , நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனிடையே, பிடிபட்ட அதே இடத்தில் அதே நேரத்தில், அந்நபர், ஹெரோய்ன் உட்பட மேலும் சில போதைப் பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்காக , நீதிபதி ஈராண்டுகள் சிறைத்தண்டனையையும், 3 பிரம்படிகளையும் தண்டனையாக விதித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!