Latestஉலகம்

சிறையிலிருந்து ஈரான் நடிகை விடுதலை

துபாய், ஜன 5 – அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானின் பிரபல முன்னணி நடிகை Taraneh Alidoosti ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். “ The Salesman “ திரைப்படத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக அந்த திரைப்படம் 2017 – ஆம் ஆண்டின் Academy விருதையும் வென்றது. ஈரானில் பெண்கள் கட்டாயமாக முக அங்கியை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தபோதிலும் முக அங்கி எதுவுமின்றி அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை Taraneh Alidoosti தமது Instagram – மில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். டிசம்பர் 17 – ஆம் தேதி கைது செய்யப்பட்ட Alidoosti இன்று விடுதலை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!