Latestஉலகம்

சிறையில் கலவரம்; அறுவர் மரணம்; 33 பேர் காயம்

மணிலா, ஜன 12 – பிலிப்பின்ஸில் நெரிச்சல் மிக்க சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த கலவரத்தில் ஆறு கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 33 பேர் காயம் அடைந்தனர். மணிலாவின் Caloocan city சிறையில் கைதிகள் கும்பல்களுக்கிடையே அந்த கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிட் தொற்றினால் கைதிகளை பார்ப்பதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும் அந்த கலவரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் கூறப்பட்டது.

முதலில் இரண்டு கைதிகளுக்கிடையே கைகலப்பு நடந்ததது. பிறகு இதர பல்வேறு கைதிகளும் அந்த மோதலில் கலந்துகொண்டதால் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. 200 பேர் மட்டுமே தங்கக்கூடிய அந்த சிறைச்சாலையில் 1,900 கைதிகள் தங்கியிருந்ததாக சிறை நிர்வாக அதிகாரி Xavier Solda தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!