Latestமலேசியாவிளையாட்டு
சிலாங்கூரிடம் 11 – 2 கோலில் தோல்வி கிளந்தான் குழுவின் ரசிகர்கள் வெறித்தனம்

கோத்தா பாரு, ஆக 26 – சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சிலாங்கூர் அணியிடம் 2-11 என்ற கோல் கணக்கில் கிளந்தான் காற்பந்து குழு தோல்வி கண்டதைத் தொடர்ந்த அதன் ரசிகர்கள் வெறித்தனமாக தீவைக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 12 நிமடங்கள் கொண்ட அந்த காணொளி பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது சிலாங்கூர் குழுவில் விளையாடிவரும் Kelantan ஆட்டக்காரர் Norizam Tukiman னை சிலாங்கூர் வெளியேற்ற வேண்ம் என கிளந்தான் எப்.சி கிளப்பின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோத கிளந்தான் எப்.சி ரசிகர்கள் இந்த வன்செயலில் ஈடுபட்டனர். எனினும் அங்கு திரண்ட போலீஸ்ஸ்காரர்கள் நிலைமையை கட்டுப்படுத்தினர்.