
கோலாலம்பூர், ஏப் 30 – Muafakat Nasional பங்காளித்துவ உடன்பாட்டின் கீழ் சிலாங்கூரில் அம்னோ மற்றும் பாஸ் ஒத்துழைப்பதற்கு தயாராய் உள்ளது. சிலாங்கூர் அம்னோ தொடர்பு குழுவின் தலைவர் Noh Omar இதனைத் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் சிலாங்கூரில் அம்னோவும் பாஸ் கட்சியும் தங்களுக்குகிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவற்கு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். சிலாங்கூரில் Muafakat Nasional மூலமாகவே ஒத்துழைக்க முடிவு செய்துள்ளோம், பெரிக்காத்தான் நேசனல் மூலமாக அல்ல என Noh Omar விளக்கம் அளித்தார்.