கிள்ளான், மார்ச் 4 – கடுமையான மழை மற்றும் காலையில் ஏற்பட்ட நீர் பெருக்கினால் இன்று Telok Gadong கில் வெள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 20 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகின. Jalan Mohd Yasmin பகுதியில் இன்று காலை மணி 8.21 அளவில் வெள்ளம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு இயக்குனர் Norazam தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோத்தா ராஜா தீயணைப்பு நிலையத்தை தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழுவினர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த திடீர் வெள்ளத்தில் சுமார் 20 வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் எவரும் வெளியேறவில்லை.
Related Articles
Check Also
Close