ஷா அலாம், மார்ச் 1 – சிலாங்கூரில் இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் 33.7 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 549 மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இணைய மோசடி குற்றங்கள் சம்பந்தப்பட்ட 405 விசாரணைகளை சிலாங்கூர் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை தொடங்கியுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Arjunaidi Mohmad தெரிவித்தார்.
இதர 144 மோசடி குற்றச் சம்பவங்கள் வழக்கமானது என இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார். இணையத்தின் மூலம் மோசடி செயலில் ஈடுபட்டுவரும் தரப்பினரால் வர்த்தக நிறுவனங்களும் தனிப்பட்ட நபர்களும் ஆயிரக்கணக்கான ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியதையும் Arjunaidi சுட்டிக்காட்டினார்.