ஷா ஆலாம், அக்டோபர்-4 – சிலாங்கூரில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 3 மாவட்டங்களில் 480 குடும்பங்களைச் சேர்ந்த 1,968 பேர் 6 தற்காலிக துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
ஷா ஆலாம், கோம்பாக், குவாலா சிலாங்கூர் ஆகியவையே பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.
பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து மீட்கும் பணிகளில் 54 தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.
Kampung Kubu Gajah, Merbau Sempah, Kampung Melayu Subang என வெள்ளமேறிய 21 பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறையின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Kampung Selayang Baru, Kampung Laksamana, செலாயாங் இந்தியர் குடியிருப்பு (Indian Sattlement) உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.