Latestமலேசியா

சிலாங்கூரில் வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஷா அலாம், நவ 22 – இவ்வாண்டு சிலாங்கூரில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பது சராசரி 11.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் ஷாரி ( Anfaal Saari ) தெரிவித்தார். எதிர்காலத்தில் மக்கள் தொகை மாற்றங்கள் மாநிலத்தின் தொழிலாளர் சந்தையை நிச்சயமாக பாதிக்கும் என மகளிர் மேம்பாடு மற்றும் குடும்பம் விவகாரத் துறைக்கான தலைவருமான அவர் கூறினார்.

இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவது , அதிகரித்த பணிச்சுமை மற்றும் வயதான தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்தின் உற்பத்தித்திறனையும் பாதிக்கும் என இன்று சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் ( Chua Wei Kiat ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Anfaal Saari தெரிவித்தார். கடந்த ஆண்டு மலேசியாவில் முதியோர்களின் எண்ணிக்கை 3.7 மில்லியன் ஆகும், மொத்த மக்கள் தொகையில் இது 11. 3 விழுக்காடை பிரதிநிதிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!