கிள்ளான் , ஏப் 18 – சிலாங்கூரில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களில் 448 பேர் நேற்றிரவு 8 மணிவரை மூன்று நிவாரணை மையங்களில் தங்கியுள்ளனர் . வெள்ள நிலைமையை கண்காணித்து பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மூன்று தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 43 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் Wan Md Razali தெரிவித்திருக்கிறார். கிள்ளான், கோலாசிலாங்கூர் பெட்டாலிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் சிலாங்கூரில் வெள்ளத்தின் பாதிப்புக்கு உள்ளாகின. அந்த முன்று மாவட்டங்களையும் சேர்ந்த 169 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Related Articles
Check Also
Close