ஷா அலாம், மார்ச் 8 – வெள்ளத்தின் காரணமாக சிலாங்கூரில் மட்டும்
167 குடும்பங்களைச் சேர்ந்த 746 பேர் வெளியேற்றப்பட்டனர் என
சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் 27 இடங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மொத்தம் 76 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பேராவிலும் 100க்கு மேற்பட்டோர் வெள்ளத்தின் காரணமாக நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.