
கோலாலம்பூர், மார்ச் 10 -15ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் பல நாடாளுமன்ற தொகுதிகளை வென்றதால் உற்சாகமாக இருக்கும் பாஸ் கட்சி DAP வசம் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றுவதற்கு குறிவைத்துள்ளது.
Kuala Kubu Baru, Sungai Pelek ஆகிய சட்டமன்ற தொகுதியை கைப்பற்றும் திட்டத்தை சிலாங்கூர் பாஸ் கொண்டிருப்பதாக அம்மாநில பாஸ் செயலாளர் Roslan Shahir தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த இரண்டு தொகுதிகளிலும் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மலாய்க்கார வாக்காளர்கள் இருப்பதால் அத்தொகுதிகளை கைப்பற்றும் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
அந்த இரு தொகுதிகளிலும் DAP யின் Lee Kee Hiong மற்றும் Ronnie Liu சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றனர்.
மேலும் தற்போது பாஸ் வசம் இருந்துவரும் கோலாலங்காட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள பந்திங் மற்றும் Morib ஆகிய சட்டமன்ற இடங்களையும் கைப்பற்றுவதற்கும் பாஸ் கட்சி வியூகம் அமைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.