Latestமலேசியா

சிலாங்கூரில் 6 மாவட்டங்களில் MCO : மே 6 – 17 வரை

கோலாலம்பூர், மே 4 –  சிலாங்கூரில்  6 மாவட்டங்களில் மே 6 – ஆம் தேதி முதல் மே-17 தேதி வரை MCO  மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருகிறது.

கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து,  ஹுலு லங்காட், பெட்டாலிங்,  கோம்பாக், கிள்ளான், குவாலா லங்காட்,  செப்பாங் ஆகிய மாவட்டங்களில் , மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

இவ்வேளையில், சிலாங்கூரிலுள்ள மேலும் மூன்று மாவட்டங்களான குவாலா சிலாங்கூர்,  சபாக் பெர்னாம்,  ஹுலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய  மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்குமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிலாங்கூரில்  MCO  உத்தரவு அமலுக்கு வரும் இடங்களில் ரமலான் சந்தைகளைத் தொடர்ந்து திறக்க அனுமதிப்பதா இல்லையா என்பது, மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என அமைச்சர் கூறினார்.

மேலும், மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் 6 மாவட்டங்களில் வசிப்பவர்கள், மாநிலம் , மாவட்டங்கள் கடந்து  பயணிக்க அனுமதியில்லை எனவும்  டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!