புக்கிட் ஜாலில், ஆகஸ்ட் -25, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய விளைட்டாரங்கில் இரு பெரும் வைரிகளான JDT-யும் சிலாங்கூரும் சந்தித்த FA கிண்ண இறுதியாட்டத்தில், JDT வாகை சூடியது.
சுமார் 80,000 இரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பரபரப்பான அவ்வாட்டத்தில் JDT 6-1 என்ற பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முற்பாதி ஆட்டம் 2-0 என JDT-க்குச் சாதகமாக முடிந்த நிலையில், பிற்பாதியில் சிலாங்கூர் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது.
என்றாலும் JDT-யின் வேகத்துக்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை.
அடுத்தடுத்து 4 கோல்களைப் போட்டு அந்த Southern Tigers அணி FA கிண்ணத்தைத் தற்காத்துக் கொண்டது.
3 கோல்களைப் புகுத்திய JDT-யின் Juan Muniz ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
2022 முதல் தொடர்ந்தாற் போல் மூன்றாவது முறையாக FA கிண்ணத்தை வென்று JDT தனிப்பெரும் சாதனைப் படைத்துள்ளது.