
கோலாலம்பூர், ஜன – 15- ஆவது பொதுத்தேர்தலில் கெடா, திரெங்கானு, கிளந்தான் உட்பட தீபகற்ப மலேசியாவில் பல நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியதால் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தையும் கைப்பற்றிவிடமுடியும் என பகல் கனவு காணவேண்டாம் என பாஸ் கட்சிக்கு சிலாங்கூர் பி.கே.ஆர் வியூக இயக்குனர் Adzman Kamaruddin நினைவுறுத்தியுள்ளார். கிளந்தான் மற்றும் திரெங்கானுவை ஒப்பிடுகையில் சிலாங்கூர் துரத மேம்பாடு அடைந்துள்ளது. பக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கம் சிலாங்கூரில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு சமூக நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இது தவிர அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளும் சிலாங்கூரில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் பாஸ் கட்சியின் கனவு பலிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.