Latestஉலகம்

சூடாக இருக்கும்போதே சாப்பிடுங்கள்!; சீனாவில் விற்கப்படும் சமைத்த ஐஸ் கட்டிகள்

சீனா, டிச 11 –  வித்தியாசமான மற்றும் விநோதமான சில மனிதர்களின் நடவடிக்கைக்கு பேர் போனது சீனா. அந்த வரிசையில் அடுத்து வந்துவிட்டது சமைக்கப்பட்ட ஐஸ்கட்டிகள். 

இந்த சமைத்த ஐஸ்கட்டி உணவு தற்போது மிகவும் பிரபலம். மக்கள் இந்த உணவை வாங்க வரிசைக்கட்டி நிற்கிறார்கள். 

மிதமான சூட்டில் ஐஸ் கட்டிகளை வாட்டி எடுக்க,  அதன் மேல் எண்ணை ஊற்றி, மிளகாய்ப் பொடி, வெங்காயத் தாள் போன்றவை தூவப்படுகின்றன. 

அவ்வளவுதான், சுவாரஸ்யமான காரமான ஐஸ் கட்டி பண்டம் தயாராகிவிட்டது. 

இந்த உணவு 15 யூவான் அதாவது 9 ரிங்கிட் 80 சென்னுக்கு விற்க்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா?

இந்த உணவை சமையல்காரர் சமைக்க அதனை மக்கள் வாங்கி உண்ணும் காணொளி இப்போது வைரலாகி உள்ளது.

இதில் வேடிக்கை, சற்றுக் குளிர்ந்த பிறகு இதை சாப்பிட வேண்டுமா என வாடிக்கையாளர் கேட்ட கேள்விக்குக் கடைக்காரர் சூடாக இருக்கும்போதே ஐஸ் கட்டிகளைச் சாப்பிடும்படி கூறுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!