
ஷா அலாம், மார்ச் 18 – இவ்வாண்டு ஜூன் மாதம் சிலாங்கூர் அரசாங்கத்தின் தவணைக் காலம் முடிவடையும்வரை அம்மாநில அம்னோ மற்றும் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுவார்கள் என சிலாங்கூர் மந்திரிபுசார் Amirudin Shari தெரிவித்திருக்கிறார். தேசிய முன்னணி தலைவர் Ahmad Zahid Hamidi யுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவு இதுவாகும் என நேற்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் அரச உரை மீதான விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேசிய முன்னணி ஐந்து இடங்களை கொண்டுள்ளது. 40 சட்டமன்ற தொகுதிகளுடன் சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.