
ஷா ஆலாம், ஆக 21 – காலையில் இரண்டாவது தவணையாக அமிருடின் ஷாரி மாநிலத்தின் மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மதியம் 10 பேர் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அவர்களில் DAP கட்சியைச் சேர்ந்த நால்வர், PKRன் மூவர், AMANAHவைச் சேர்ந்த இருவர் மற்றும் UMNOவைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, கின்றாரா சட்டமன்றத்தின் Ng Sze Han, செகின்ச்சான் சட்டமன்றத்தின் Ng Suee Lim, பண்டார் உத்தாமா தொகுதியின் Jamaliah Jamaluddin ஆகியோர் DAP சார்பாக ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
PKR கட்சி சார்பாக, ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் Dr Fahmi Ngah, கோத்தா அங்கெரிக் தொகுதியின் Najwan Halimi, தஞ்சோங் செபாட்டைச் சேர்ந்த Borhan Aman Shah ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
அமானா கட்சியைச் சேர்ந்த பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினர் Izham Hashim மற்றும் தாமான் தெட்ம்பளரின் சட்டமன்ற உறுப்பினர் Anfaal Saari ஆகிய இருவர் இடம்பெற்றுள்ள நிலையில், அம்னோவைச் சேர்ந்த ஆயேர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் Rizam Ismail இடம்பெற்றுள்ளார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை என்ன என்பது வரும் புதன்கிழமை, நடைப்பெறவுள்ள முதல் ஆட்சிக்குழு சந்திப்புக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என மந்திரி பெசார் தெரிவித்திருக்கிறார்.