Latestமலேசியா

சிலாங்கூர் உயரிய விருதுகள் விற்பனை இருவர் கைது

ஷா அலாம், மார்ச் 21 – SPMS எனப்படும் Darjah Kebesaran Seri Paduka Mahkota Selangor என்ற சிலாங்கூரின் உயரிய விருதை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். மார்ச் 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் மலாக்கா மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் போலியான கடிதங்கள் மற்றும் பல்வேறு கைதொலைபேசிகளும் அந்த நபர்களிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார். உயரிய விருது பெறுவதற்காக 600,000 ரிங்கிட் நன்கொடை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையில் அந்த தொகையை தாம் ஏமாந்தது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்திருந்ததையும் Hussein Omar சுட்டிக்காட்டினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!