
கோலாலம்பூர், செப் 19 – சிலாங்கூர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி நியமிக்கப்பட்டார். இன்று கூடிய சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் மாநில சபாநாயகர் Lau Wing San இதனை அறிவித்தார். சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கின்போது மாநில எதிர்க்கட்சி தலைவராக அஸ்மின் நியமிக்கப்பட்டிருப்பதாக Lau Wing San கூறினார். சிலாங்கூரில் எதிர்க்கட்சியாக இருக்கும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி இம்மாதம் 15ஆம் தேதி சமர்ப்பித்த கடிதத்தில் பெரிக்காத்தான் நேசனல் இதனை தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவி உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்கு சிலாங்கூர் மந்திரிபுசார் Amiruddin Shari முன்னணி வகித்தார். அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.