
கோலாலம்பூர், பிப் 4 – இவ்வாண்டு நடைபெறவிருக்கும் மாநில தேர்தலை முன்னிட்டு போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து பேச்சு நடத்த சிலாங்கூர் அம்னோ தயாராய் இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் Megat Zulkarnain Omardin
தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பில் மாநில தேசிய முன்னணியுடன் அம்னோ பேச்சு நடத்தும் . அதன்பின் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பில் மாநில தேசிய முன்னணி பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சு நடத்தும் என அவர் கூறினார். அம்னோ நிலையிலான பேச்சுக்கள் முடிந்துவிட்டன. பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சு நடத்துவதற்கு நாங்கள் தயாராய் இருக்கிறோம். ஒற்றுமை அரசாங்கத்தின் உணர்வுக்கு ஏற்ப கலந்துரையாடல்களை எப்படி நடத்துவது என்பது குறித்து இனி பக்காத்தான் ஹராப்பான்தான் சிந்திக்க வேண்டும் என Megat Zulkranain கேட்டுக்கொண்டார்.