
உலு லங்காட், ஜன 15 – தேசிய முன்னணியுடன் தற்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை கொண்டிருந்தாலும் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது வென்ற அனைத்து 40 தொகுதிகளையும் Selangor pakatan தற்காத்துக் கொள்ளும் என அமனா கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் வென்ற தொகுதிகளை தேசிய முன்னணிக்கு விட்டுக்கொடுக்காது என தாம் புரிந்துகொண்டிருப்பதாக அமனா மத்திய செயற்குழு உறுப்பினரான Sany Hamzan கூறினார். தற்போது பெரிக்காத்தான் நேசனல் வசம் இருந்துவரும் தொகுதிகள் மட்டுமே தேசிய முன்னணியுடன் நாங்கள் விவாதிப்போம் என அவர் தெரிவித்தார். பெரிக்காத்தான் வசம் இருந்துவரும் தொகுதிகளில் 6 பெர்சத்து கட்சியும் ஒரு தொகுதியை பாஸ் கட்சியும் வென்றிருப்பதாக Taman Templer சட்டமன்ற உறுப்பினருமான Sany கூறினார். எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதம் சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.