ஷா அலாம் , மார்ச் 2 – சிலாங்கூர் மந்திரிபெசார் Amirudin Shari கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. சுகாதார அமைச்சின் SOP நடைமுறைக்கு ஏற்ப அவர் ஏழு நாட்களுக்கு தனித்திருக்கும் நடவடிக்கையில் இருந்து வருவார்.
இதனால் ஏற்படும் சிரமங்களுக்காக அவர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதனிடையே மார்ச் 8ஆம் தேதி Amirudin தமது பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது ஊடக செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.