
கோலாலம்பூர், ஜன 16 – ஹரி ராயா, சீனப் பெருநாள் , தீபாவளி ஆகிய 3 முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கும் , முதியோர்களுக்கான ‘Jom Shopping’ பற்றுச் சீட்டுக்கான தொகை 100 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில மெந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ( Dato Seri Amirudin Shari ) தெரிவித்தார்.
அதோடு அந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வதற்கான , குடும்பத்தின் மாத வருமான வரம்பு, 2,000 ரிங்கிட்டிலிருந்து 3,000 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த Jom Shopping பற்றுச் சீட்டுக்கு, Skim Mesra Usia Emas திட்டத்திற்கு தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். அதன் வழி அத்திட்டத்திற்கு 82, 400 பேர் தகுதி பெறுவார்கள் என்பதோடு , அதற்காக, 1 கோடியே 60 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுமென அமிருடின் ஷாரி கூறினார்.